8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!!
மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர், இரு பிரிவினர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட மோதலில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது.
மேலும் மணிப்பூர் மாநிலம் முழுவதும் இண்டர்நெட் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 8 மாவட்டங்களில் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிக சிறிய மாநிலம் மணிப்பூர் தான், இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள்தான் அதிகம் வசித்து வருகின்றனர். அதில் பல பழங்குடியின பிரிவுகள் உள்ளது, அதில் இரு பிரிவினர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட மோதலில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் மெய்டேய் என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக அம்மாநில அரசு இறுதி முடிவு ஏதும் எடுக்காமல் திணறி வருகிறது.
மெய்டேய் என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து அனைத்து பழங்குடியின மாணவர் சங்கத்தின் சார்பில் ஒற்றுமை ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அனைத்து பழங்குடியின மாணவர் சங்கத்தின் சார்பில் ஒற்றுமை ஊர்வலம் இன்று நடந்தது இந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. டயர்களுக்கு தீ வைக்கப்பட்டனர், மேலும் கடைகள், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.இந்த வன்முறை சம்பவம் தமிழர்கள் அதிகம் வாழும் மோரே நகரில் நடைபெற்றது குறிபிடத்தக்கது.
வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர், மேலும் போராட்டங்கள் வன்முறைகள் பரவலாக பரவியதால் அனைத்து கடைகளும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர மணிப்பூர் மாநிலம் முழுவதும் இண்டர்நெட் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.