மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?
தமிழ் திரைவுலகில் என்றுமே உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாத நடிகர் மற்றும் நடிகைகளே கிடையாது, இவருடைய திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் தான் பாபா.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக ஹிந்தி திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா நடித்தார்.இவரை தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது பம்பாய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் இந்தியன், முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.
அந்த வகையில் நன்றாக நடித்து கொண்டிருந்த இவருக்கு திடீரென கேன்சர் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். பின்னர் சிறிது காலம் ஓய்வு எடுத்த இவர், நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.
அதன் பின் ஹிந்தி மொழி திரைப்படம் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த பாபா திரைப்படம் தான் என் திரையுலக வாழ்வையே அழித்த படம் என்றும், தென்னிந்திய மொழிகளில் தனக்கு இருந்த ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சீரழித்த ஒரு படம் என்றால் அது ரஜினியுடன் நடித்த பாபா படம் தான் என்று பகிரங்கமாகவே ரஜினி மீது குறை கூறியுள்ளார். மனிஷாவின் இந்த குற்றச்சாட்டு ரஜினி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.