மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

Photo of author

By CineDesk

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

CineDesk

Updated on:

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது.
மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.

மணிஷ் பாண்டே மணந்த நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இரு குடும்பத்துக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெளியில் அதிகமாகக் கசியவிடப்படாமல் இருந்த நிலையில் இன்று மும்பையில் திருமணம் முடிந்தது.

இன்று திருமணம் முடித்த மணீஷ் பாண்டே அடுத்ததாக 6 ம் தேதி நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.