Manjanathi Pazham: ஓ.. இதுதான் அந்த மஞ்சணத்தி கட்டையா? இந்த பழம் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க..!!

Photo of author

By Priya

Manjanathi Pazham: பல வகையான நோய்களுக்கு மருந்து சாப்பிட்டு அதனால் பலருக்கும் பக்க விளைவுகள்  வந்திருக்கும். நோய்க்கு மருந்து சாப்பிட்டு, அதனால் ஏற்பட்ட பக்க விளைவுக்கும் மருந்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பலரும்  ஆளாகிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்ட பலருக்கும் சிறந்த மருந்ததாக இருப்பது தான் இந்த நுணா பழம். இந்த நுணா பழத்தை (Nuna pazham) மஞ்சணத்தி பழம் என்று கூறுவார்கள்.

தமிழ் சினிமாவில் இந்த மஞ்சணத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தி நிறைய பாடல்கள் வந்து நாம் கேட்டிருப்போம். அப்போது எல்லாம் அதனை பற்றி நாம் யோசித்திருக்க மாட்டோம். மஞ்சணத்தி கட்டை என்று கூறுவார்கள். இந்த மஞ்சணத்தி கட்டை என்றால் நுணா மரம் தான். இதனை சாலை ஓரங்களில், வயல்களில், புதர்களில் எல்லா இடங்களிலும் இந்த மரம் பரவலாக காணப்படும்.

அதனால் தான் என்னவோ இந்த மரத்திற்கான மகிமையை பலரும் அறியவில்லை. நாம் இந்த பதிவில் நுணா பழத்தின் பயன்களை பற்றி இந்த பதிவில் (nuna palam benefits in tamil) காண்போம்.

நுணா மரம்

இந்த மஞ்சணத்தி மரம்  மிகவும் வலிமையான மரமாகும். இந்த மரத்தை வெட்டி காயவைத்தால் மற்ற மரக்கட்டை போன்று இது கனமாக இருக்காது. இந்த மஞ்சணத்தி கட்டை நீரில் மிதக்க கூடிய தன்மை கொண்டது. மேலும் மாட்டு வண்டிகளில் இரு மாடுகளுக்கு இடையில் வைத்து மாட்டு வண்டியை பூட்டுவதற்கு இந்த கட்டை பயன்படுகிறது. ஏனென்றால் மற்ற மரக்கட்டை கடினமாக இருப்பதால் மாடுகளால் தாங்கிக்கொள்ள முடியாது.

மேலும் இந்த மரக்கட்டையை பயன்படுத்தி கட்டில் அல்லது வேறு ஏதாவது உபகரணங்கள் செய்ய நேர்மறை ஆற்றல் கிடைக்கும். நன்றாக தூக்கம் வரும். மேலும் இந்த மரப்பட்டைகள், கட்டைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால் உடல் வலி எல்லாம் பறந்து போய்விடும். மேலும் இந்த நுணா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலை பாரம், தலை வலி, சளி அனைத்திற்கும் சிறந்த தீர்வு.

Manjanathi Pazham

நுணா பழம் பயன்கள் – Manjanathi Pazham

இந்த நுணா பழத்தை கிராமத்தில் பிறந்து, வளர்ந்த பிள்ளைகளுக்கு தெரியும். சிலர் சிறுவயதாக இருக்கும் போது இந்த மரத்தில் ஏறி அதன் காய்களை பறித்து அதனை தென்னங் குச்சிகளை சொருகி வீடு, தேர், போன்றவற்றை செய்து விளையாடி இருப்பார்கள். இந்த நுணா பழம் பார்ப்பதற்கு நாவல் பழம் போல் கருமையாக இருக்கும்.

இந்த பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி இதில் 37 சதவீதம் உள்ளது. இதனால் எலும்புகளுக்க வலு சேர்க்கிறது. இதில் நீர்ச்சத்து 97 சதவீதம் உள்ளது. பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைட்ரேட், கால்சியம் அதிகளவு உள்ளது.

இது இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மூட்டுவலி, உடல் வலி, வயிற்று வலி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

தோலழற்சி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இந்த பழம் உள்ளது.

மலச்சிக்கலை நீக்குகிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.

நோனி ஜூஸ் – Noni juice benefits in tamil

வெளிநாடுகளிலும், நம் நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த நுணா பழத்தின் அதாவது வெள்ளை நுணா பழம், பார்ப்பதற்கு நுணா பழத்தின் பெரிய அளவாக இருக்கும். இந்த பழத்தில் ஜூஸ் (Noni fruit benefits in tamil) செய்து அதனை சந்தைகளில் அதிக அளவு விற்பனை செய்கிறார்கள். மேலை நாடுகளுக்கு இணையான பழம் தான் நம் நாட்டில் கிடைக்கும் இந்த மஞ்சணத்தி பழம்.

இந்த நோனி ஜூஸ் 1லிட்டர் சுமார் ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்க்கப்படுகிறது. எனவே நம் இந்த நுணா பழம் கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.

மேலும் படிக்க: Sodakku Thakkali: ஏழைகளின் குலாப் ஜாமுன்..!! உடம்பில் இருக்கும் அனைத்து நோய்களும் க்ளோஸ்..!!