லடாக்- சீன எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து விரைவில் பேச வேண்டும் என மன்மோகன்சிங் மோடிக்கு அறிவுரை

Photo of author

By Parthipan K

சீன விவகாரம் குறித்து பிரதமர் மோடி கூறியவை சர்ச்சைக்கு உள்ளாக்கிய நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இது குறித்து பேசிய போது பிரதமர் மோடிக்கு இது அழகல்ல, ராஜதந்திரமும் இல்லை என விமர்சித்து கூறியுள்ளார் .

இந்திய -சீன எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடந்ததை அடுத்து பிரதமர் மோடி அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் .இக்கூட்டத்தில் பேசிய அவர் சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும் நமது பகுதிகளை கைபற்றவில்லை எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கல்வான் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்று விடுத்திருந்தார்.அதில் பிரதமர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும்,மேலும் ஏப்ரல் மாதத்தில் இருந்தே நமது எல்லைகளை சீனா ஆக்கிரமித்து வருவதாகவும் இதனை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறியிருந்தார் .

பிரதமர் மோடியின் வார்த்தைகள் எக்காரணம் கொண்டும் சீனா தரப்பின் நியாயத்திற்கு வலுசேர்க்கும் படி அமைய கூடாது எனவும்,இந்திய சீன எல்லை விவகாரத்தில் உயிர் இழந்த 20 வீரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.