தனது மரணத்தை முன்கூட்டியே கணித்த மனோபாலா!! நடந்தது இதுதான் சுந்தர் சி!!

Photo of author

By Gayathri

தனது மரணத்தை முன்கூட்டியே கணித்த மனோபாலா!! நடந்தது இதுதான் சுந்தர் சி!!

Gayathri

Manophala predicted his death in advance!! This is what happened Sundar C!!

துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த மனோபாலா அவர்கள் இதுவரையில் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி 175 படங்களில் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட பல சிறப்புகளை தன்னகத்தை கொண்ட மனோபாலா அவர்கள் தன்னுடைய 69 ஆவது வயதில் உடல் நலக்குறைவில் இறைவனடி சேர்ந்தார். மனோ பாலா அவர்கள் இறப்பதற்கு முன்பாக இயக்குனர் சுந்தர் சி அவர்களிடம் தெரிவித்ததை தற்போது தெரிவித்துள்ளார்.

மனோ பாலா அவர்கள் இயக்குனர் சுந்தர் சி இடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருப்பது :-

அரண்மனை 4 எடுக்கும் பொழுது மனோபாலா தன்னுடைய படத்தில் இல்லை என கவலை கூர்ந்த இயக்குனர் சுந்தர் சி அவர்கள், இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது மனோபாலா அவர்களிடம் இருந்து மெசேஜ் ஒன்று வந்ததாகவும் அந்த மெசேஜில், இந்த திரைப்படத்தில் உன்னுடன் இணைந்து நான் நடித்து உன்னை தொல்லை செய்ய முடியாது. எனவே நீ இந்த திரைப்படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தனக்கு பதிலாக அரண்மனை 4 இல் வேறு யாரையாவது நடிக்க வைக்கும் படி கூறிய மனோபாலா அவர்கள் தான் நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வார்த்தையையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். மனோபாலாவின் உடைய இந்த குறுஞ்செய்தியானது தன்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என மனம் நொந்து இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.