கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

0
191
Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!
Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மகன் பெருமாள். இவர் நேற்று மாலை முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியிலுள்ள கருவண்டரராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இரண்டு செருப்புகள் தண்ணீரில் மிதந்ததாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கூறியுள்ளனர். உடனே உடுமலை தீயணைப்புத்துறைக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்விசாரணையில் பெருமாள் தற்கொலை தான் செய்து கொண்டார? இல்லை விரோதிகளால் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றார்கள். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகின்றது.

Previous articleகன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா?
Next articleதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை- வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு