தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Photo of author

By Vinoth

தன் படத்தில் மன்சூர் அலிகான்… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான அர்ஜுனிடமும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகானுக்கான தான் அடுத்து இயக்க உள்ள தளபதி 67 படத்தில் ஸ்பெஷலான ஒரு கதாபாத்திரத்தை எழுதி வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் மன்சூர் அகிகான் நடனமாடிய சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் இடம்பெற்று வைரலானது குறிப்பிடத்தக்கது.