உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

Photo of author

By Kowsalya

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

” ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

 சச்சிதானந்தாய தீமஹி

 தன்னோ சாய் ப்ரசோதயாத்”.

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

“சாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே

ஸம்பத் தளிக்கும் திருவடியே

நேயம் மிகுந்த திருவடியே

நினைத்த தளிக்கும் திருவடியே

தெய்வ பாபா திருவடியே

தீரம் அளிக்கும் திருவடியே

உயர்வை யளிக்கும் திருவடியே”.

இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி “ஸ்ரீ சாய் பாபாவை” மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும்.

உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

குரு காயத்ரி மந்திரம்:

“ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே

 க்ருணி ஹஸ்தாய தீமஹி

 தந்நோ குருஹ் ப்ரசோதயாத்”.

மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுவது மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் சகல நன்மைகளும் ஏற்படும். தினமும் வணங்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் வணங்க முழுமையான பலன்களை பெறலாம்.