மாண்டஸ் புயல் எதிரொலி! விமான போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்கு வரத்து சேவைகளை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கடந்த இரண்டு நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இவை புயலாக மாறியதால் அந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த புயல் புதுச்சேரி ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கரையை கடந்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்யப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்ச்காரிகை விட்டுத்தது.
அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் அனைத்தும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்களாகும்.தற்போது புயல் காற்றானது மணிக்கு 60 கி.மீ இருந்து 75 கி.மீ வேகத்தில் வீசுகின்றது.ஆனால் இந்த விமானங்கள் பறக்கும் பொழுது சுமார் 50 கி.மீ வேகம் கொண்ட காற்றை சாமாளிக்கு தன்மை கொண்டது.அதனால் புயல் காற்று அதிகம் உள்ளதால் சிறிய ரக விமானம் பெரிதும் பாதிப்படையும் என தெரிவித்துள்ளனர்.
விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் புயலின் காரணமாக விமான சேவைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை விமான நிலையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்,மேலும் இதனை தொடர்ந்து 6 வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.