காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

Photo of author

By Hasini

காங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

காங்கோ ஒரு மத்திய ஆப்ரிக்க நாடு ஆகும். இதில் 9 படகுகள் இணைந்து காங்கோ ஆற்றில், ஒன்றாக பயணம் செய்ய ஆரம்பித்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளன. இது கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் வரும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், படகுகளில் பயணம் செய்த பலரை காணவில்லை.
பலர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர். தகவல் அறிந்த உடன் மீட்பு குழுவினர் அங்கு துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தத்தளித்து கொண்டு இருந்த 39 பேரை மீட்டு உள்ளனர். 99 பேர் உயிரிழந்து உள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தந்து உள்ளனர்.
மீண்டவர்களில் ஒருவர் படகு சவாரியில் சுமார் 400 பேர் வரை பயணம் செய்ததாகவும் தெரிவித்து உள்ளார். அதன் காரணமாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசின் செய்தி தொடர்பாளர் இந்த செய்தியை உறுதி படுத்தி உள்ளார். அங்கு சாலைகள் சீராக இல்லாததன் காரணமாக பெரும்பாலான மக்கள் படகு சவாரியை தான் நம்பி உள்ளனர். பெரும்பாலும் நீர்வழி போக்குவரத்தையும் நம்பியே உள்ளனர். இந்த விபத்து மக்களிடையே மிகுந்த வேதனையை அளித்து உள்ளது.