டெல்லியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்.!!

0
210

டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி.

ஐபிஎல் நடப்பாண்டு கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தத் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை தோனி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் ஹேசில்வுட் 2 விக்கெட்டையும், ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 63 ரன்களும், ருதுராஜ் 70 ரன்களும் எடுத்தனர்.

Previous articleஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.!! இன்றைய (11-10-2021) ராசி பலன்கள்.!!
Next articleகாங்கோ நாட்டில் ஏற்பட்ட விபத்தில் பலரை காணவில்லை! பலர் சடலங்களாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here