“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

Photo of author

By Kowsalya

தன் கணவனை பழிவாங்க மனைவி தனது கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களை ஓபன் செய்து அதில் கணவனின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அப்போது வயது மதிக்கத்தக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இடிபோல் பல பிரச்சினைகள் வந்துள்ளது. சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகவே இருவரும் இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து போயுள்ளனர். இருவரும் இரண்டு வருடமாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அந்த இளைஞரின் ஆண் நண்பர் பதறிப்போய் அந்த ஆணிற்கு போன் செய்துள்ளார். அப்போது பேசிய அந்த இளைஞரின் நண்பர் இன்ஸ்டாகிராம் உன்னுடைய பல படங்கள் வெளியாகி உள்ளதாகவும், பல நிர்வாண புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த இளைஞர் உடனடியாக இன்ஸ்டாகிராமில் சென்று பார்த்துள்ளார். அதில் அவரது பெயரிலேயே கணக்கு துவங்கப்பட்டு அவரது பக்கத்திலேயே பல நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். செய்வதறியாது திகைத்து நின்ற அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் சொல்லி புகாரை பதிவு செய்துள்ளார்.

 

விசாரணை நடத்திய பின்பு தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்துள்ளது. அப்படி கணக்கு உருவாக்கி நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டது வேறு யாரும் இல்லை அந்த இளைஞரின் மனைவி தான்.

 

கணவன் மனைவி பிரச்சனைக்காக கணவனை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் அவரது பெயரிலேயே பல பக்கத்தை ஓபன் செய்து திருமணத்திற்குப் பின் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஒருவரின் பழிவாங்கும் எண்ணம் எந்த அளவிற்கு போயுள்ளது என்பதை இந்த சம்பவமே உதாரணம்.