வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி!

Photo of author

By Hasini

வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி!

கடந்த சில வருடங்களாகவே பூமி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. எனவேதான் வல்லுனர்கள் மரம் வளர்ப்போம்! பூமியை பசுமையாக வைப்போம்! என்று கூறுகின்றனர். ஆனாலும் சில பல காரணங்களால் மரங்களை வெட்டி எறிவதன் காரணமாக  உலகத்தில் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இது ஒரு  காரணம் என்றாலும் இதனால் பல காடு விலங்குகள் அழிந்து பொய் வருகின்றன.  ஆனால் தற்போது கனடாவில் கடும் வெப்பம் காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல பேர் உயிரிழந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த வருடம் கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. எப்பொழுதுமே பருவகாலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடை காலமாகும். இந்த ஆண்டு கோடை காலம் கடும் வெப்பமான தாக உள்ளது என்றும்  இதை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் உணரப்படுகிறது.

கடந்த வாரம் செவ்வாய் அன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இது மிக அதிகபட்சமான  வெப்பநிலை தான். இதை தொடர்ந்து லைட்டான் நகரத்தில் மட்டும் 121 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

நான்கு நாட்களிலேயே கனடாவில் மட்டும் 233 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. மேலும் இறப்பு எண்ணிக்கை  தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். வெப்பநிலையை தொடர்ந்து குறையாத பட்சத்தில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

எனவே கனடா அரசு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், குளிர்சாதன அறையிலேயே இருக்கும்படியும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பகல் நேரங்களில் அதிக குடிநீர் குடிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கடும் வெயில் நிலவுகிறது.

மேலும் அமெரிக்காவின் பசுபிக் வடமேற்கு நகரங்களான போர்ட்லேண்ட், ஓரிகான், சியாட்டில், வாஷிங்டன் ஆகிய இடங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு முடிந்த வரை அனைவரும் தங்களால் முடிந்த அளவு மரம் நடுவோம் மழை பெறுவோம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் . நாம் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே அதுவும் நம்மை இயற்கை பேரழிவுகளில் இருந்து காக்கும்.