இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது.
மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.
அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய கிரேன் கீழே விழுந்தது. கட்டிடத்தின் உச்சியில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் தழும்பி தழும்பி கீழே கொட்டிய வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும், பல கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தது. பாங்காங் நகரத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டது.
இதுவரை 163 பேர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானாலும் இறப்பு எண்ணிக்கை பல நூறாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தாய்லாந்து மியான்மர், பாங்காக் ஆகியவற்றில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில், தாய்லாந்தில் மட்டுமே 100 பேரும், மியான்மரில் 100 பேரும் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், பல நூறு பேர் காயமடைந்திருக்கிறார்கள். மியான்மர் நாட்டில் இணையசேவை முற்றிலும் முடங்கி இருப்பாதால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு இந்தியாவும் நிவாரண பொருட்களை அனுப்பவதோடு, மீட்பு பணியிலும் கைகார்க்கவுள்ளது. ஒருபக்கம், இன்று காலை 5.16 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.7 ஆக பதிவாகியிருந்தது.