என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

0
169

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது.

“ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை.

பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது பேஸ்புக்கின் அல்காரிதத்தில் ஏற்பட்டுள்ள குறை என்று தோன்றுகிறது.

இது சம்மந்தமாக பேசியுள்ள மெட்டா நிறுவனத்தினரின் சார்பாக ”எங்களுக்கு இது சம்மந்தமான விஷயங்கள் கவனத்துக்கு வந்தன. இந்த பிரச்சனையை சரிசெய்து மீண்டும் நிலைமையை சரியாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ஏற்பட்ட சங்கடங்களுக்காக வருந்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக நிறுவனம் கடந்த வாரம் சுமார் 1 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ‘சமரசம்’ செய்யப்பட்டுள்ளதாக கூறியது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே பேஸ்புக் தங்கள் வாடிக்கையாளர்களை டிக்டாக் போன்ற செயலிகளால் கடுமையாக இழந்து  வருகிறது. இதனால் அந்த நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தன. மார்க்கின் சொத்து மதிப்பும் மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த புதிய பிரச்சனை அவருக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனே இதை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Next articleசிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!