திருநெல்வேலி பெண்ணின் பேச்சை ரசித்த மாரி இயக்குனர் செல்வராஜ்!!

0
80
Mari director Selvaraj enjoyed the Tirunelveli girl's speech!!
Mari director Selvaraj enjoyed the Tirunelveli girl's speech!!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். பத்து வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணி புரிந்தவர். அடிமட்ட மக்களின் வாழ்வியலை மிகத் தத்துருவமாகவும், துணிவுடனும் காட்சி பொருளாக்குபவர். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய தமிழ் திரைப்படங்களை இயற்றியுள்ளார். பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியுள்ளார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர்.

இவர் ஸ்கிரீன் ப்ளே செய்வதற்கு முன் அவரே களத்தில் இறங்கி மிகத் தத்ரூபமாக நடித்து கதாபாத்திரத்தின் உண்மை தன்மை வெளிவர செய்பவர். குறிப்பாக வாழை திரைப்படத்தில் அவர் சொந்த ஊரில் நடக்கும் அவலத்தை எடுத்துக்காட்டி இருப்பார். அந்த சிறுவனின் கடினத்தை இந்நாளும் நினைத்தாலும் மனம் கணமாகும் அந்த அளவுக்கு நுண்ணிப்பாக ஒவ்வொரு சீனுக்கும் அவ்வளவு மெனக்கட்டு இருப்பார்.

ஒரு நிகழ்ச்சியில்வாழை திரைப்படத்தை பார்த்த பெண் ஒருவர் திருநெல்வேலி பாஷையில் வாழைன்னு பேரு வச்சதனால கேக்கேன் என சொல்ல, இது பக்கா திருநெல்வேலி பாஷன்னு மாரி சார் முகத்தில் அவ்வளவு சந்தோசம். மேலும் அந்தப் பொண்ணும் நான் திருநெல்வேலி காரவுங்கதானே என சொன்னார். அடுத்தடுத்த அந்தப் பெண்ணின் சரமாரியான கேள்விகளை தொடுத்துக் கொண்டே இருந்தார். அதற்கு அவரும் மிக அழகாக பதில் கூறியிருப்பார். பொதுவாக கீழ நாட்டுக்காரங்க நல்ல வேலை பாப்பாங்க என கேட்க, அவரும் இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க என ஆச்சரியத்தோடு கேட்டு இருந்தார்.

மேலும் வாழைப் படத்தை மணிரத்தினம் சார் பார்த்துவிட்டு, இவர் மிகத் திறமை வாய்ந்தவர். ஒவ்வொரு நடிகரையும் எவ்வாறு நடிக்க வைத்தார் என பொறாமையாக உள்ளது என புகழ் உரைத்தார்.

Previous articleவில்லனாக நடித்த பிரபலமான நடிகர் பப்லுவின் 58 வயது காதல் தோல்வி!!
Next articleவிசிக, தவக-வை தொடர்ந்து திமுகவை சீண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!! உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்!!