இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!

0
279

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ஏற்கனவே ஒப்பந்தமான துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு முன்பாக அவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த தொடரை தயாரிக்க உள்ளது. இந்த தொடரின் ஷூட்டிங் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Previous articleமருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Next articleமகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here