பெண்ணின் திருமண வயது இனி 9 தான்!!

Photo of author

By Vinoth

மேற்காசிய நாடான ஈராக் பார்லிமென்டிலில் ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் அதிகம் இருக்கின்றனர். அந்த நாட்டின் பிரதமாராக முகமது ஷியா அல் சுடானி உள்ளார். மேலும் இந்த நாட்டில் பெண்களுக்கு தற்போது திருமண வயது 18 ஆக உள்ளது. இதில் கடந்த 1950ல் ஷியா முஸ்லிம் இனத்தில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது.

ஆனால் 28% பெண்கள் 18 வயது முன்னபாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனை 2023 ஆம் ஆண்டு ஐ.நா., தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஈராக் பெண்களின் திருமண வயதை தற்போது 18ல் இருந்து 9 ஆக குறைக்க அதில் உள்ள சட்ட திருத்தம் செய்ய ஈராக் நாடு பார்லிமென்ட்டில் முடிவு செய்த்துள்ளது. இதில் ஈராக் நாட்டில் அதிகம் ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் உள்ளதால் இந்த சட்டம் கொண்டுவருவதில் மற்றும் சட்டம் திருத்தம் கொண்டு வருவதில் பிரச்சனை இருக்காது என அந்த நாட்டின் பார்லிமென்ட் கூறப்படுகிறது.

ஆனால் அந்த நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்ட மசோதா கொண்டுவரபட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகமாகும். மேலும் அந்த பெண் குழந்தைகள் பள்ளி படிப்பு பாதியில் இருந்து அவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்ற கவலையுடன் மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளது.