கொரோனா பரவலின் காரணமாக ஐடி நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டிலேயே இருந்து வேலைபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அலுவலகத்தில் செய்யும் வேலையை விட வீட்டில் இருந்தே பணிபுரிவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், அதிக டார்கெட் கொடுத்திருப்பதாகவும் பலரால் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நபர்களுக்கு மத்தியில், ஒரு பெண் தனது திருமண கோலத்தில் மணமேடையில் அமர்ந்துகொண்டு மடியில் லேப்டாப் இன்னொரு கையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு அலுவலக வேலை பார்க்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் மணப்பெண்ணின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்தபடியே மணமகன் அமர்ந்துள்ளார்.
If you think you are under work pressure then watch this… via WA @hvgoenka pic.twitter.com/odbFTxNofh
— Dinesh Joshi. (@dineshjoshi70) July 3, 2020
இந்த வீடியோவை பார்த்த பலர், வீட்டில்தான் வேலை வேலை என்று டார்ச்சர் வருகிறதென்று பார்த்தால் கல்யாண நேரத்திலுமா இப்படி என்று வருத்தமுடனும், சிலர் நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர். நவீன காலத்தில் படிக்காத பாமரன் முதல் படித்தவர்கள் வரை பொருளாதாரத்தை தேடி ஓட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.