திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

Photo of author

By Parthipan K

கொரோனா காலகட்டங்களில் திருமணங்கள் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்த தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தது. இன்றோடு (ஜூலை 31) 6ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்டு மாதம் இறுதி வரை சில தளங்களுடன் ஊரடங்கு நீட்டிக்கும் என நேற்று அறிவித்தார்.

அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பது குறித்தான வழிமுறைகளை அறிவித்திருந்தது. ஆனால், திருமணம் தொடர்பான எந்தவித அறிவிப்பும் நேற்று அறிவிக்கவில்லை. இதனை ஒரு குற்றச்சாட்டாக சிலர் எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இதற்கு இன்று தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதாவது, ஒரு திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பாஸ் எடுத்து செல்ல வேண்டும். திருமண அழைப்பிதழில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும். இ பாஸ்ஸிற்கு விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.