திருமண பிரச்சனையை ஏற்படுத்தும் களத்திர தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரம்

Photo of author

By Anand

திருமண பிரச்சனையை ஏற்படுத்தும் களத்திர தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரம்

Anand

Marriage Pariharam-News4 Tamil Online Tamil News

பெரும்பாலான நபர்களுக்கு ஜாதகத்தில் உள்ள களத்திர தோஷத்தால் வயதாகியும் திருமணத் தடை, திருமணம் ஆன பின்னர் கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் மற்றும் மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

ஜாதகத்தில் உள்ள களத்திர தோஷத்தால் ஏற்படும் இந்த பிரச்சனைகளை நம்முடைய வழிபாடு மற்றும் சில பரிகார முறைகள் மூலமாக தவிர்க்கலாம்.

பரிகாரம்:

சூரியன் மற்றும் ராகு-கேது சேர்க்கையால் வயதாகியும் தொடர்ந்து திருமணத் தடையை சந்திப்பவர்கள் ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.இவ்வாறு வழிபடுவதால் அவர்களுக்குண்டான திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்னரோ அல்லது திருமணமாகிய பிறகோ பிரச்சினைகள் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் அவர்களிடம் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து நலம் உண்டாகும்.

சுக்ரன் மற்றும் கேது சேர்க்கை இருப்பதால் திருமணத்தில் பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.இதனால் அவர்களுக்கு அந்த பிரச்சனைகள் தீரும்.

செவ்வாய் மற்றும் கேது சேர்க்கை இருப்பவர்களுக்கு உண்டாகும் திருமண பிரச்சனைகளை தீர்க்க அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட வேண்டும்.

திருமண பிரச்சனை உள்ளவர்களுக்கு சனி மற்றும் ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.