நாகார்ஜுனா வீட்டில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் திருமணங்கள்!!

Photo of author

By Gayathri

நடிகர் நாகார்ஜுனா அவர்கள் பிரபல தயாரிப்பாளரின் மகளான லட்சுமியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன் பிறகு சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தமிழ் சினிமாக்களில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக இருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அகில். இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் நாக சைதன்யா மற்றும் அகில் இருவரையும் நாகார்ஜுனா ஒன்றாகவே வளர்த்துள்ளார்.

இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவிற்கு மட்டும் நடிகை சமந்தாவுடன் திருமணம் நடந்துள்ளது. ஏதோ காரணத்தால் அகிலனுடைய திருமணம் நடக்காமல் போய்விட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் பிறகு, அகில் அவர்கள் திரைப்படங்களில் நடிப்பதை ரசித்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது நாக சைதன்யா அவர்கள் நடிகை துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இரண்டாவது வகையான அகிலன் உடைய திருமணம் குறித்த எந்தவித தகவல்களும் தற்போது வரையில் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சுஷாந்த் நாகர்ஜூனாவின் சகோதரியின் மகன். இவருக்கும் பிரபல கோட் பட நடிகை மீனாட்சி சவுத்ரிக்கும் காதல் விவகாரம் கசிந்துள்ளது. இச்சடா என்ற தெலுங்கு படத்தில் இருந்து இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இருவரும் இரண்டு பேரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமணம் முடிந்த கையோடு இந்த திருமணமும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.