திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து தப்பி தவறியும் இந்த பொருட்களை எடுத்து வந்துவிடாதீர்!!

Photo of author

By Divya

பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயத்திற்கு உட்பட வேண்டியிருக்கிறது.அந்தவகையில் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் எடுத்து வரக் கூடாத சில பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1)பிறந்த வீட்டில் இருந்து கத்தி,அரிவாள் மனை,கத்தரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை புகுந்த வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.இதனால் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டாருக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும்.

2)துடைப்பம்,ஒட்டடை குச்சி போன்ற வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை எடுத்து வரக் கூடாது.

3)பிறந்த வீட்டில் இருந்து புளி மற்றும் வெந்தயத்தை எடுத்து வந்தால் உறவில் சிக்கல் ஏற்படும்.

4)உப்பு மற்றும் எண்ணெயை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது.இவை இரண்டும் ஈமச் சடங்கு செய்ய பயன்படுத்தும் பொருள் என்பதால் இதை தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது.

5)தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட விளக்கை புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது.இதனால் தாய் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கிவிடும்.

6)பாகற்காய்,முருங்கை காய்,அகத்தி,கறிவேப்பிலை போன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது.

7)அரிசி புடைக்கும் முறத்தை தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது.கோலமாவை தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக் கூடாது.

8)தாய் வீட்டில் இருந்து அசைவ உணவுகளை புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது.