இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

Photo of author

By Parthipan K

இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா!

இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. மதுரை கள்ளழகர் கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவ விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது. 

இன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.  தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்பிறகு இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.