முககவசம் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு

Photo of author

By Parthipan K

கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக அளவில் தேவைப்பட்டதால் அது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் சேர்த்தது.தற்பொழுது மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து முகக்கவசம் மற்றும் சானிடைசரை நீக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 பிரிவின் கீழ் இந்த இருபொருட்களும் நீக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில் இருந்து அதாவது மார்ச் மாதம் 13 ஆம் தேதி மத்திய அரசு முகக்கவசம்,கையுறை மற்றும் கைகளை சுத்தம் செய்யும் திரவியம் ஆகிய பொருள்களை அத்தியாவசிய பொருட்கள் பிரிவின் கீழ் கொண்டுவந்தது.30 ஆம் தேதி வரை இந்த பொருள்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அத்தியாவசிய பொருட்களில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது கரோனா வைரஸ் பரவ தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் முக கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.இதுகுறித்து மத்திய நுகர்வோர் சுகாதாரத்துறை செயலாளர் லீனா நந்தன் பி.டி.ஐ நிபுணரிடம் கூறியதாவது,முகக்கவசம் மற்றும் சானிடைசர் 100 நாட்களை கடந்து அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ளது.

 

தற்பொழுது இந்த இரு பொருட்களும் எளிதில் மக்களுக்கு கிடைக்கிறது,மேலும் அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் கையிருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து இந்த பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.