பள்ளிகளில் இனி இது மாணவர்களுக்கு கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0
227
Masks made compulsory
Masks made compulsory

பள்ளிகளில் இனி இது மாணவர்களுக்கு கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

பள்ளிகளில் இனி இது மாணவர்களுக்கு கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மேலும் பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவிமூலம் பரிசோதனை நடத்தி பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக பள்ளிகளில் யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
Next articleநீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here