மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

0
143
Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!
Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!

மாஸ்க்  போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700  வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை.

அதனால் முகக்கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்ற எண்ணத்தை முன் வைத்து மன்னார்குடியில் செயல்படும் தன்னார்வ அமைப்பினர்,ஒரு புதிய வித முயற்சியை கையாண்டுள்ளனர்.பேருந்துகளில் முகக்கசம் அணிந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச பயணசீட்டு வழங்கி வருகின்றனர்.இது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்போது நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுடன் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர்.முகக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் கூறும் காரணத்தை போலீசார் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்வதில்லை.பைன் என்றால் பைன் தான் என கூறுகின்றனர்.அவ்வாறு பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்கள் இருந்துக்கொண்டுதான் உள்ளார்கள்.

இதனால் அவற்றிம் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மன்னை ஜேசிஐ அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான விழிப்புணர்வு அப்பகுதி மக்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது.மாஸ் அணிந்து பயணச்சீட்டு இலவசமாக வழங்குவதை மன்னை ஜேசிஐ அமைப்பின் தலைவர் எம்.சி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.சுமார் 200 பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

அதற்கடுத்து பேருந்து நிலையத்தில் மாஸ் அணியாமல் காத்திருந்த பயணிகள் மற்றும் மாஸ்க் அணியாமல் பேருந்தில் ஏறிய பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழக்கப்பட்டது.ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பாக தலைமை அஞ்சலகத்தில் தானியங்கி சானிடைசர் கருவியும் அமைக்கப்பட்டது.அதுமட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும்,வங்கிகளிலும் சானிடைசர் கருவியை அமைக்க ஜேசிஐ மன்னை அமைப்பினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறினர்.மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் மற்றும் விதி முறைகளை பின்பற்றுதல் என அனைத்திற்கும் விழிப்புணர்வு தரும் விதத்தில் பரிசு பொருட்கள் தருவதில் திட்டமிட்டு வருவதாக கூறினர்.

Previous articleகொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!
Next articleஅனைத்து மாவட்ட ஆட்சியருடனும் தலைமைச்செயலாளர் ஆலோசனை! காரணம் என்ன தெரியுமா?