வரலாறு காணாத பனிப்புயல்: ஸ்தம்பித்தது இங்கிலாந்து அதிர்ச்சி புகைப்படங்கள்

0
194

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பனி பரவி இருந்த நிலையில் சமீபத்தில் அடித்த பனிப்புயல் காரணமாக வடக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன.

வரலாறு காணாத வகையில் வீசிய பனிப்புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும், முக்கிய சாலைகளில் 5 சென்டிமீட்டர் வரை பனி தேங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

பனிப்புயலை அடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்போது முக்கிய சாலைகளில் சென்டிமீட்டர் கணக்கில் வரை சாலைகளில் பனிக்கட்டி இருப்பதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியில் சிக்கி எடுக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் விரைந்து சாலைகளை சீர் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் சாலைகளில் ஆங்காங்கே பணியினால் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleரிலீசுக்கு தயாராகிறது தனுஷின் இரண்டு படங்கள்: புதிய தகவல்!
Next articleநூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி