தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் .திரையரங்கு உரிமையாளர்களிடம் ஆரம்பித்து ரசிகர்கள் வரை அனைவருக்குமான ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது இந்த படம்.
இப்பொழுது இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய குறிப்பு என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி இரவு இந்த படத்தை படக்குழு முழுமையாக பார்த்து இருக்கின்றது படம் பார்த்தவர்கள் படம் நன்றாகவே வந்திருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இன்றைய தினம் இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள், எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டொரு நாட்களில் சென்சார் சான்றிதழ் வாங்கி விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக் க்கிறது மாஸ்டர் படக்குழு.
படம் வெளியாகும் நேரம் நெருங்கும் போதுதான் சென்சாருக்கு படங்களை அனுப்புவார்கள், அவ்வாறு மாஸ்டர் திரைப்படமும் சென்சாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது பொங்கல் சிறப்பாக ஜனவரி மாதம் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படம் குறித்து இன்னொரு தகவலும் கிடைத்திருக்கின்றது, இந்தியாவுடைய டாப் நடிகராக நடிகர் விஜய் அவர்களை கவுரவிக்கின்றது ட்விட்டர் நிறுவனம். ஏனென்றால் 2020 ஆம் வருடத்திற்கான அதிக ட்வீட் செய்யப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில், இந்திய அளவில் முதல் இடம் பிடித்திருக்கின்றது இந்த மாஸ்டர் திரைப்படம். அதேபோல கடந்த 2018ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் வருடங்களில் சர்க்கார் மற்றும் பிகில் படங்கள் ட்விட்டரின் டாப் 10 இடங்களுக்குள் வந்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.