இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

Photo of author

By Parthipan K

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

Parthipan K

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படித்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. நடிகர் சாந்தனு, கைதி அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்

மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும்வரை தினமும் ஒரு புரோமோ ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர்.

மாஸ்டர் திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்களால் படத்தின் நிறைய காட்சிகள் இணையத்தில் லீக்கா செய்யப்பட்டுவிட்டன. இதை அறிந்த படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். படம் லீக்கானதை அடுத்து லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படமானது எங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு தயவுசெய்து யாரும் லீக்கான வீடியோக்களை ஷேர் செய்யவேண்டாம். இன்னும் இரண்டு நாட்களில் மாஸ்டர் திரைப்படம் உங்களுடையது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படம் ரிலீஸ்கு முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டதால் சினிமா வட்டாரமே அதிர்ச்சியில் உள்ளது.