மாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!

0
170

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “மாஸ்டர்” திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முன்னதாகவே பாடல்கள் ரிலீஸ் செய்து தமிழகமெங்கள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க, முதலில் சேவியர் பிரிட்டோ தயாரித்த நிலையில் பின்னர் இணை தயாரிப்பாளர்களாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் மற்றும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

 

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம், கொரோனா பாதிப்பால் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுவரை படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளிவராத நிலையில் படக்குழுவினர் திணறி வருகின்றனர். ரசிகர் பட்டாளத்தை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு மாஸ்டர் படம் சரியானதாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவிடம் பேட்டி எடுத்தபோது, படம் ரிலீஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், மாஸ்டர் படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும். அது தீபாவளி அல்லது பொங்கல் தினமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். எனவே வரும் 2020 தீபாவளி அல்லது 2021 பொங்கல் அன்று மாஸ்டர் படம் ரிலீஸ் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

Previous articleமுதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக
Next articleநள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!