மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவிப்பு சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிகில் படத்துக்குப் பின்னர் விஜய் நடித்து வரும் படத்துக்கு மாஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டனி வழியே மற்றும் சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதன் முதல் லுக் போஸ்டர் புத்தாண்டின் போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதே சமயம் அது ஹாலிவுட் படம் ஒன்றின் போஸ்டரின் காப்பி எனவும் கேலி செய்யப்பட்டது.
தற்போது கர்நாடகாவில் மாஸ்டர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் எப்போது எனக் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதை வெளிப்படுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம். பொங்கல் பண்டிகையான நாளை மாலை 5 மணிக்கு ’மாஸ்டர்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே மாஸ்டர் செகண்ட் லுக் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் ஆக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
ஏற்கனவே வெளியான முதல் போஸ்டரில் விஜய் மட்டும் இருந்ததால் இரண்டாவது போஸ்டரில் விஜயுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதால் இது இந்த அறிவிப்பு அவர் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.