‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

0
151

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மூன்றாவது லுக்கில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எனவே நாளை மாலை 5 மணிக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி ரசிகர்களும் குஷியில் இருப்பதால் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Previous articleஅவுட்டானதும் கத்தி அவமானப்படுத்திய ரசிகர்கள்:கோபத்தில் ஸ்டோக்ஸ் சொன்ன வார்த்தை !
Next articleபி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !