இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

Photo of author

By Parthipan K

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

Parthipan K

Mathematics is compulsory for children up to this age! A new law will be introduced!

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

இங்கிலாந்து பிரதமாரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.இவர் பதவி ஏற்றத்தில் இருந்து முதன் முறையாக புத்தாண்டு அன்று தான் நட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது இவர் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியது.அதில் இருந்து தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் இருந்துதான் மக்கள் மீண்டு வருகின்றானர்.

ஆனால் சீனாவில் மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் அனைவரும் கவனமாக இருப்பது என்பது மிக அவசியம்.மேலும் ஒருவருக்கு படிப்பு என்பது அடிப்படை தகுதி அதனால் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரயும் 18 வயது வரையில் கணிதத்தை படிக்க வேண்டும் அதனை உறுதி செய்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

மேலும் அனைத்து இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமான ஒன்றாக உள்ளது.தற்போதுள்ள காலகட்டத்தில் நம்முடைய குழந்தைகள் வேலைகளுக்கு முன் முந்தைய காலகட்டத்தில் இல்லாத அளவில் கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படுகின்றது.இவ்வாறான திறன்கள் இன்றி நமது குழந்தைகள் வெளி உலகில் நிலைத்து நிற்க முடியாது என கூறினார்.மேலும் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையில் உள்ளவர்களை பாதிப்பதே இந்த கணித பாடம் தான் என குறிப்பிட்டார்.