மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி பாலன் காலமானார்…

Photo of author

By Sakthi

VKT Balan:மதுரா  டிராவல்ஸ் லிமிடெட் தலைவர்  வி.கே.டி பாலன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன், வயது (70) உடல் நலக்குறைவால் மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்  நவம்பர் -11  அன்று உயிரிழந்தார். இவர் 1954 ஆண்டு திருச்செந்தூரில் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், பிழைப்பதற்காக 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

அவர்  சென்னை வந்தபோது தங்க இடம் இன்றி ,தவித்து வந்தார். எழும்பூரில்  தங்கி வந்தார். ஆரம்ப காலத்தில் மக்களுக்கு  விசா எடுத்து தருவதற்காக வேலை செய்து வந்தார். பிறகு மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி கடுமையாக உழைத்தார்.

கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு  இவரே. அவருக்கு  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கியது. சுற்றுலா துறையின் முன்னோடியாக திகழ்ந்தவர். இவரை கவுரவப்படுத்தும்  வகையில் இந்திய அரசு  சர்வதேச விமானங்கள் மற்றும் விடுதிகள் இலவசமாக  தங்குவதற்கு உரிமை வழங்கி இருக்கிறது.

வி.கே.டி பாலன் கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு  இருந்த நிலையில் நம்பர்-11 உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு சென்னை மந்தைவெளி இல்லத்தில் நடைபெற இருக்கிறது. வி.கே.டி பாலன் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.