சேதுபதி உடன் இணைந்து நடிக்கவிற்கு  மாவீரன்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By Jeevitha

சேதுபதி உடன் இணைந்து நடிக்கவிற்கு  மாவீரன்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Jeevitha

Maveeran to act with Sethupathi!! Fans in excitement!!

சேதுபதி உடன் இணைந்து நடிக்கவிற்கு மாவீரன்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சிவகர்த்திகேயன் தமிழ் சினிமா பட நடிகராகவுள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும்  தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.  இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார்.  மேலும் யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்திருந்தார்கள்.

ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனமும், வரவேற்பையும் பெற்றது. மேலும் இதுவரை மாவீரன் 55 கோடி வசூல் வந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் குரல் குடுத்த விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இவர் எனக்கு விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டி என்று இணையத்தியில் பரவும் செய்தி உண்மையில்லை என்று குறிப்பிட்டார். மேலும் அவர் நான் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்தார். இவர்கள் இருவரும் இணைவதை ரசிகர் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.