உயராத பெட்ரோல்,டீசல்விலை

0
246

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணைக்கப்படுகிறது. அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் கடைசியிலிருந்து மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமுமில்லை.ஆனால் ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் 16வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 92 ரூபாய் 43 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 85 ரூபாய் 75 காசுக்கும் விற்பனையாகி வருகின்றது இந்த நிலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Previous articleதமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது?
Next articleகொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here