வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வரும் 14ஆம் தேதி கோயமுத்தூர் நீலகிரி மற்றும் தமிழக தென் மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதோடு இடி மின்னல் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது, மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரு அளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.