உயராத பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் நிம்மதி!

0
173

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவற்றை மையமாக வைத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பிரபலமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத கடைசி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இதற்கு நோய்த்தொற்றை காரணமாக தெரிவித்தாலும் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை இவ்வளவு நாள் உயராமல் இருந்ததற்கு காரணம் என்றும் ஒரு சிலர் கருதுகிறார்கள். காரணம் இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்கும் சமயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தினால் அது நிச்சயமாக இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதை கணித்து மத்திய அரசு இந்த விலை உயர்வை அறிவிக்காமல் இருந்தது என்று தெரிகிறது.

ஆனால் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை முடிந்து ஒரு சில தினங்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது.இந்த சூழ்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டருக்கு பெட்ரோல் 93 ரூபாய் 84 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 87 ரூபாய் 49 காசுக்கும், விற்பனையாகி வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleசென்ட்ரல் விஸ்டா கட்டுவதானால் இதையும் செய்ய வேண்டும்! எதிர்கட்சிகள் பிரதமரிடம் கோரிக்கை!
Next articleஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கியது! ஆக்சிஜன் வினியோகம்!