விழுப்புரம் மாவட்ட கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புர தெற்கு மாவட்ட திமுக பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமை ஏற்று நடத்தினார். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், அன்னியூர் சிவா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி முதல்வர் எடுத்த வெள்ளபாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் மக்கள் பாராட்டும் வகையில் இருப்பதாகவும், இந்த மழைவெள்ளத்தினை கொண்டு திமுக அரசின் மீது தவறான குற்றசாட்டுகளை கூறி மக்களிடையே பொய்யான அரசியல் செய்து வருகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவரது இந்த அரசியல் மக்களிடயே செல்லாது என்றுக் கூறினார்.
மேலும் திமுக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இந்த தேர்தலில் விழுப்புரத்தில் உள்ள 7 தொகுதிககளில் திமுக சார்பில் யார் நின்றாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்காக கட்சி நிர்வாகிகள் எவ்வித பாகுபாடின்றி ஒத்துழைத்து உறுதுணையாக செயல்பட வேண்டும் .என்று கூறினார். மேலும் வீடு வீடாக சென்று திமுக வாக்காளர்களை கட்சி நிர்வாகிகளாக இணைத்திட முழு மூச்சாக செயல்பட வேண்டு என்று கூறினார்.
அடுத்ததாக தான் 8 முறை தேர்தலில் நின்று 6 முறை வெற்றிபெற்றதை சுட்டிகாட்டினார். வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்காமல் போகலாம் எனவும், இளைய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து செயல்பட வேண்டும் என கூறினார்.மேலும் இவ்வாறாக அமைச்சர் பொன்முடி தனக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.