உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

Photo of author

By Anand

உண்மையிலேயே சனி பகவான் கெடுதல் செய்பவரா? உண்மை என்ன?

ஒன்பது நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்படுவது வழக்கமானது.ஆனால் சனி பகவான் போல் அள்ளிக் கொடுப்பவர் எவரும் இல்லை என்பது தான் உண்மை என்று கூறப்படுகிறது.அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப சனி பகவான் பலனை அளிப்பார் என்பது தான் உண்மையே.இதனால் தான் சனி பகவான் என்று கூறினாலே அனைவரும் பயப்படும் ஒர் கடவுளாக இக்காலத்தில் கருதுகின்றனர். ஆனால் சனி பகவான் குறித்து நன்று அறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

சூரிய பகவானுக்கும் சாய தேவிக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் சனி பகவான். சூரிய பகவாநிற்க்கு 4 மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவியின் நிழலின் உருவமான சாய தேவிக்கு பிறந்தவர் தான் சனி. சூரிய பகவானின் முதல் மனைவியான சந்தியா தேவி நீண்ட காலமாக சூரிய பகவானின் வெப்பத்தில் இருந்து வருவதால்,சந்தியா தேவயின் சக்திகள் குறைந்து வந்துள்ளது. அவர் சக்தியை அதிகரித்து கொள்ள பூமிக்கு சென்று தவம் செய்ய நேர்ந்தது.

சூரிய பகவான் தவம் செய்வது குறித்து மறுப்பு தெரிவிப்பார் என்பதால் தனது நிழலில் இருந்து தன்னைப் போலவே 1 உருவத்தை சந்தியா தேவி உருவாக்கினார்.அவர் தான் சூரிய பகவானின் 2 வது மனைவி சாய தேவி.சந்தியா தேவிக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளார்.சாயா தேவியிடம் சந்தியா தான் இருக்கும் இடத்தில் இருந்து தனது பிள்ளைகளை பார்த்து கொள்வதாகவும்,நீ என் நிழல் என்பது யாருக்கும் தெரிய கூடாதென்றும் சந்தியா தேவி, தனது நிழலான சாய தேவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

சந்தியா தேவியிடம் சத்தியம் செய்ததால் இவரும் சூரிய பகவாநிற்க்கு இரண்டாவது மனைவியாக வாழ்ந்துவந்தார்.சூரிய பகவானிற்கும் சாய தேவிக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் தான் கர்மங்களை அளிக்கும் சனி பகவான். இவரின் அம்மா சிவ பெருமானை நினைத்து தொடர்ந்து தவமிருந்ததால் தனது உடல்நிலையில் கவனம் செலுத்த தவறி விட்டார். இதனால் நிழலின் சுருபமாக இருப்பதால் சனி பகவான் மிகுந்த கருமை நிறத்துடன் பிறந்தார்.கருமை நிறத்துடன் பிறந்த சனி பகவானை சூரிய பகவான் தன்னுடைய மகனாக ஏற்க மறுத்து அவரது அம்மாவையும் ஒதுக்கி வைத்தார்.

இதனைக்கண்டு வெகுண்ட சனி பகவான் இவருக்கு தக்க பாடத்தை புகட்ட சிறு வயது முதலே சிவ பெருமானை நினைத்து கடுமையான தவமிருக்க தொடங்கினார்.இந்த கடுமையான தவத்தின் பயனாக தான் சனி பகவான் தீய காரியங்கள் செய்பவர்களின் மீது தனது துன்மார்க்க பார்வையை வீசும் நித்தியத்துவத்தை அடைந்தார். அவரின் இந்த சக்தியை கொண்டு எந்த கடவுளுக்கும், அசுரர்களுக்கும் மற்றும் தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் கொடுக்க முடியும்.

சனி பகவான் இந்த சக்தியின் மூலமாக தனது தந்தை சூரிய பகவானை தனது மிருகத்தனமான பார்வையால் தண்டித்தார். குறிப்பாக வஞ்சகம் மற்றும் துரோகம் செய்பவர்கள், பாவங்களை பற்றி பயப்படாதவர்கள், மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுபவர்கள் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பவர்கள் என யாரும் சனி பகவானிடம் இருந்து தப்ப முடியாது. அவர்களின் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கண்டிப்பாக அவர்களுக்கு கிடைத்தே தீரும் என்பதே இந்த வரத்தின் சாரம்சமாகும்.