பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்!

Photo of author

By Hasini

பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்!

பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தேர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோட் சிங் சித்து மந்திரி சபையில் இருந்து பதவி விலகினார். அதிலிருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்க்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. இது தொடர்ந்து மோதலாக மாறி இருவரும் ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி விமர்சிக்கும் போக்கும் அங்கே நிலவி வந்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள் அமரீந்தர் சிங்குக்கு எதிராக மாறியது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அமரீந்தர் சிங் மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை, வேதனையுடன் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பதவி விலகினார். மாநில கவர்னர் பன்வாரிலால் ப்ரோகிதை சந்தித்து ராஜினாமா கடிதமும், திடீரென சமர்பித்தார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டசபை தலைவராக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங்  சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அமரீந்தர் சிங் மந்திரி சபையில் தொழில் மற்றும் கல்வி துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் என்றும் கூறப்படுகிறது. இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல் மந்திரி என்ற சிறப்பையும் பெறுகிறார். இவருக்கு வயது 58 ஆகும்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரியாக  சரண் ஜித் சிங் சன்னி கவர்னர் பன்வாரிலால் ப்ரோகித்  தலைமையில் இன்று காலை பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதல்-மந்திரி களாகவும் பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாபில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே அவகாசம் இருக்கும் நிலையில், முதல்-மந்திரியாக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி கூறும்போது,  சன்னி பஞ்சாப் முதல் அமைச்சரானதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் முன்பே முதல் மந்திரி நியமனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பஞ்சாபில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதன் காரணமாக இந்த சூழலில் புதிய முதல் மந்திரியாக இவரை நியமனம் செய்துள்ளது அரசியல் தந்திரம் என்றே தோன்றுகிறது என குற்றச்சாட்டாக கருத்து ஒன்றையும் கூறியுள்ளார்.