திரையுலகில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் காலடி வைத்து வைத்தவர் நடிகை தமன்னா. அதன் பின்பு தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற பலமொழி படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக தற்பொழுது வரை தன்னுடைய மார்க்கெட்டை மெயின்டைன் செய்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை தமன்னா தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபகாலமாகவே இவர் கிளப் பாடல்களுக்கு ஃபேமஸ் ஆக மாறி வருகிறார். இப்படி இருக்கக்கூடிய சூழலில் நடிகை தமன்னா அவர்கள் பிரபல நடிகையான ஸ்ரீதேவி அவர்களின் பயோபிக்கள் நடிப்பது தனக்கு மிகப்பெரிய கனவு என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நடிகை ஸ்ரீதேவியின் கணவரிடம் கேட்ட பொழுது ஸ்ரீதேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்திருக்கிறார். எனினும் அவர்களுக்கு விருப்பம் வரும் பட்சத்தில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக உள்ளது என நடிகை தமன்னாவை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
சினிமா வாழ்க்கையில் தமன்னா அவர்களுக்கு பெரிய வெற்றியும் இல்லாமல் பெரிய தோல்வியும் இல்லாமல் நடுநிலையாக சென்று கொண்டு இருக்க கூடிய சூழலில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் காதலித்து வந்த விஜய் வர்மா என்கின்றவர் தமன்னா அவர்களை விட்டு சென்று விட்டதாகவும் இப்பொழுது இருவரும் காதலில் இருந்து பிரிந்து தனித்தனியே அவரவருடைய தனிப்பட்ட வாழ்க்கைகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.