பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! கோலாகலமாக நடைபெற்ற வரவேற்ப்பு!

Photo of author

By CineDesk

பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! கோலாகலமாக நடைபெற்ற வரவேற்ப்பு!

மெக்சிகோ நகர் மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து கொண்ட வினோத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரில் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹயூகோ சோசா. இவர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமர்ப்பித்தல் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த திருமணத்தை ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது. இந்த திருமண நிகழ்வின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாயை கட்டப்பட்டிருந்தது. கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் முதலைக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டு இருந்தது. திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார்.

திருமணத்தின் போது மேயர் விக்டர் கூறியது, இயற்கையுடன் மழை, உணவு, மீன்வளம் வேண்டி நாங்கள் இந்த பிரார்த்தனையை செய்கிறோம். இது எங்கள் நம்பிக்கை என்றார். இந்த மாதிரியான வினோத திருமணங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் காலத்தை சேர்ந்த ஓக்ஸாகா மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இத்திருமணம் இயற்கையின் கருணையே வேண்டி இம்மாதிரியான சடங்குகள் பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது.