Vidaamuyarchi: விடாமுயற்சி படம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் இயக்குனர் வேண்டுகோள்.
அஜித் நடிப்பில் வரும் பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகுவதில் பல சிக்கல்களை சந்தித்துதான் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அஜித்துக்கு இடையே சண்டை இதனால் ஷூட்டிங்கில் இடர்பாடு என கூறினர். அதுமட்டுமின்றி ஒரு சில காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
தற்பொழுது இதுபோல விமர்சனங்களுக்கு அப்படத்தின் இயக்குனர் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு சில காட்சிகளை சரியாக எடுக்கவில்லை மீண்டும் அதனை பேட்ச் ஒர்க் செய்வதற்காக வெளிநாடு செல்வதாக கூறுகின்றனர். அதேபோல அஜித் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எடிட் செய்து பலமுறை சூட் செய்வதாகவும் கூறினார்கள், இவ்வாறான செயல்முறையை நான் ஒருபோதும் செய்வதில்லை.
இப்படி நான் செய்கிறேன் என்பதை நிரூபித்து காட்டி விட்டால் கட்டாயம் நான் சினிமாவிலிருந்து வெளியேறி விடுகிறேன். தயவு செய்து பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மேற்கொண்டு அஜித் மற்றும் எங்களுக்கு உண்டான உறவு நட்புடையது. எனது மகள் உட்பட அனைவரையும் கேட்பார். இதனை எல்லாம் அறியாமல் பொய்யற்ற தகவல்களை சொல்லி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.