எனக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் இந்த உறவு தான்.. இதனால் தான் DIVORCE பெற்றோம்!!

Photo of author

By Gayathri

மக்களால் “இசைப்புயல்” என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் “ஏ.ஆர்.ரகுமான்”. இசை என்றாலே பெரும்பாலான மக்களுக்கு நினைவில் வருபவருள் ஒருவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்தான். தனது வியப்பூட்டும் இசையால் பல விருதுகளைக் குவித்து வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல், இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான “பத்மபூஷன்” விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்திருந்தனர். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் தனது விவாகரத்தை அறிவித்த சில நேரங்களில் அவரது இசைக்குழுவில் கிட்டார் வாசிக்கும் இசைக் கலைஞரான மோகினி டேவும் அவருடைய கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் மக்கள் பலர் இருவரையும் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

தனக்கு எதிரான செய்திகளை உடனடியாக யூ ட்யூபர்கள் நீக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர் என்று மோகினி டே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் இருந்து வருகிறேன். எனக்கு ரோல் மாடல்களாக பல பேர் உள்ளனர். என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு இவருக்கு உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் எனக்குத் தந்தை போன்றவர். அவருடைய மகளுக்கு என்னுடைய வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட என்னையும் அவரையும் இணைத்துப் பல வதந்திகள் வந்துள்ளன. இந்த செய்திகள் காயப்படுத்தும் வகையில் இருக்கின்றன. எனவே, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த வதந்திக்கு வீடியோவில் மோகினி டே ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.