வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது.
இதனால் வெங்காயத்தின் விலை மலைபோல் உயர்ந்து உள்ளது.
அதாவது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் 120 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதாவது வெங்காயம் விலையை குறைப்பதற்காக டிசம்பர் 15-ம் தேதிவரை வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கையிருப்பில் இருந்து கூடுதல் வெங்காயம் சந்தைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.