தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

Photo of author

By Savitha

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

Savitha

தலைநகர் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் கோடை காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயல் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதன்படி கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக 500 சதுர கி.மீ க்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்றும் பயிர் கழிவுகள் எரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை கண்காணிக்க ரோந்து குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசு குறைந்து வருவதாகவும் நாடாளுமன்றமே அதனை ஏற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் இது டெல்லி மாநில மக்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன் என்றும் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

எனவே அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக டெல்லி மக்களுடன் இணைந்து இந்த ஆண்டும் கோடைகால காற்று மாசு செயல்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.