இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு!

0
324
Meat shops are prohibited to operate here for the next 20 days! The order issued by the Corporation!
Meat shops are prohibited to operate here for the next 20 days! The order issued by the Corporation!

இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு!

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன் காரணமாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் எலஹங்கா விமான நிலையத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் அனைத்து அசைவு கடைகளுக்கும்.அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன்,கோழிக் கறி உள்ளிட்ட இறைச்சி விற்கும் கடைகள் இன்று முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை கட்டாயமாக மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த உத்தரவு பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பொருந்தும்.இந்நிலையில் கட்டுப்பாட்டை மீறினால் அவர்களின் மீது விமானப்படை விதியின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleதறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!  பலியான கல்லூரி மாணவர்!
Next articleநெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here